யார் இவள் ?
கரு கரு விழிகள் துரு துரு இயற்கை
விறு விறு பேச்சு பர பர வாழ்கை
மழை துளி போல் என் வாழ்வில் வந்தாள்
முள்ளும் ரசிக்கும் ரோஜாவை போல் என் இதயத்தை தைத்தாள்
அந்த மண் வாசனை தாக்கியதா தெரியவில்லை ... அவள் வாசம் தாக்கியது
யார் இவள் ? எங்கே வந்தாள் ? எதற்கு வந்தாள் ? ஏன் வந்தாள் ?
சந்தித்தது என்னவோ சிலநேரம் தான்...ஆனால் அவளை பற்றி பல சிந்தனைகள்
இது ஏன் கனவாக இருக்ககூடாது ? என்று என்னா
நிஜம் என்னை பார்த்து கை கொட்டி சிரித்தது
காதலில் விழுந்து விட்டேநோ ? தெரியவில்லை ....
மோகமுள்ளும் குத்தவில்லை
யார் இவள் ?
Tuesday, August 31, 2010
வண்ணங்கள்
வண்ணங்கள்
வெள்ளை மனதுடன் நம் வாழ்கை துவங்க
நீல அலைகள் போல் மேலும் கீழும் நம் பயணம் செல்ல
ஊதா உன் காதலுக்கு தூதாக போக
மஞ்சளுடன் மங்கை உன் வாழ்வுக்கு வழி கொடுக்க
செந்நிற குங்குமம் அவள் அழகுக்கு அழகு சேர்க்க
கருப்பும் அழகு தான் என்று பொறுப்புடன் பேச
பச்சை பசுமையாய் எனக்கு எண்ணங்கள் தோன்ற
வண்ணங்கள் உன் கன்னங்கள்... தேன் கிண்ணங்கள்

வானம்
வானம்
என்றும் எங்களை அன்புடன் வரவேற்கிறாய்
பல வண்ணங்களுடன் பட்டாம்பூச்சியையும் புலம்ப செய்கிறாய்
நீ கருக்க, அந்த உழவன் சிரிக்க...வயதையும் மறந்து உன்னை ரசிக்க
இடி இடிக்க, மழை பெருக்க, ஒரு யுகம் போதுமா உன்னை வர்ணிக்க??

சுதந்திரம்
சுதந்திரம்
யுத்தம், ரத்தம், சத்தம், முத்தம்.
யுத்த சத்தத்தை நிறுத்தி ரத்த வெறியை ஒழித்து
மழலைகளின் முத்த சதத்தால் பாரதத்தை உருவாக்குவோம்
சுதந்திர நல் வாழ்த்துக்கள்
யுத்தம், ரத்தம், சத்தம், முத்தம்.
யுத்த சத்தத்தை நிறுத்தி ரத்த வெறியை ஒழித்து
மழலைகளின் முத்த சதத்தால் பாரதத்தை உருவாக்குவோம்
சுதந்திர நல் வாழ்த்துக்கள்
Subscribe to:
Posts (Atom)